நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழ வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு தெரிவித்திருந்தார்.
மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை, பனையூரில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி அமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும், இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் விஜய் திட்டமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பாளர் அல்லது, 2,3 தொகுதிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்தித்து மாவட்ட பொறுப்பு மற்றும் பதவிகள் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours