ராமநாதபுரத்தில், சுயேட்சை சின்னத்தில், ஓ பன்னீர் செல்வம் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை இன்று ஓ.பி.எஸ் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 20 தேதி தொடங்கியது.
இந்நிலையில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்தனர். அ.தி.மு.க-வின் கட்சி மற்றும் சின்னத்தை ஓ.பி.எஸ் பயன்படுத்த கூடாது, என்பதால் அவர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட இன்று காலை ஓ.பி.எஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் பா.ஜ.க கூட்டணியில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இது போல தி.மு.க பொருளாளர் டி.ஆர் பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், திருச்சியில் வைகோ, வேலூரில் தி.மு.க கதிர் ஆனந்த், கன்னியாகுமரியில் பா.ஜ.க பொன்.ராதாகிருஷ்ணன், தென் சென்னை அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், நெல்லை மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
+ There are no comments
Add yours