தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2024-25 !

Spread the love

2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது.

நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது-பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும்; ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு.

தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

2030-க்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிமுகம்.

பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு.

2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours