ஆட்சிக்கு வர தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது :
“தமிழ்நாட்டுக்குள் சும்மாவாவது வந்துவிட்டு போவோம் என்றே வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி;
தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட போது வராத பிரதமர் இப்போது மட்டும் ஏன் வருகிறார்?;
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது”
“நாதகவிற்கு கரும்பு விவசாயி சின்னம் வருகிறதோ இல்லையோ நான் போராடுவேன்;
விவசாயி சின்னம் வேண்டும் என நீதி கேட்டு தான் உச்சநீதிமன்றம் சென்றோம் நீதிபதி ராசி இல்லை என்று சொல்கிறார்;
நாளை டெல்லி உயர் நீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கு வரவிருக்கிறது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு தான் சின்னம் குறித்து முடிவு செய்யப்படும்;
நாம் தமிழர் கட்சி பெயரை கூறுவதில் அப்படி என்ன கஷ்டம்; தேமுதிக, அதிமுக போல அனைத்து தொகுதிகளிலும் தற்போது தனித்து போட்டியிடுவது நாதக மட்டும் தான்
தேர்தல் முடிந்த பிறகு முதல் வேலையாக பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும் என வழக்கு தொடருவேன் இந்திய நாட்டின் தேசிய மலர் எப்படி ஒரு கட்சியின் சின்னமாக இருக்க முடியும்; ஒன்று தேசிய மலரை மாற்றுங்கள் அல்லது பாஜகவின் சின்னத்தை மாற்றுங்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours