காங்கிரஸ் கவுன்சிலரை கைது செய்ய மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

Spread the love

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் 23-வது வார்டு ரயில்வே காலனி பகுதியில் கடந்த ஆறு மாதகாலமாக தூய்மை பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள் குவிந்து, கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் ஒருவர் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிய வருகிறது. பலமுறை புகார் அளித்தும், நகராட்சியில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள 23-வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா இருந்து வருகிறார். தனது வார்டில் ஏற்பட்டுள்ள இந்த அவலநிலையை கவிதா அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதம் என்பவர் அந்த பகுதியைச் சேர்ந்த 23-வது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கவிதா புருஷோத்தமனிடம் புகாரளித்துள்ளார். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததால் மேட்டுப்பாளையம் நகராட்சியிக்கு நேரடியாக சென்று பிரச்சனையை எடுத்துக் கூறி புகார் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அந்த வார்டில் தூய்மை பணிகளுக்காக துப்புரவு தொழிலாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் தூய்மை பணிகளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 23-வது வார்டு கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் அங்கு வந்து தகராறு செய்துள்ளனர். தூய்மை பணிகளை மேற்கொள்ள வந்த துப்புரவு பணியாளர்களை இங்கு தூய்மை பணிகள் செய்யவிடாமல் தடுத்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

வார்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என போராடிய கவுதமை, எங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட்டியா என கேட்டு கடுமையாக திட்டியுள்ளனர். அத்துடன் கவுதமை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் இளைஞர் கவுதமின் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த காட்சிகளும் சமூகவலை தளங்களில் வந்துள்ளன.

தெருவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தன்னார்வத்துடன் பணியாற்றிய இளைஞரை கவுன்சிலரும் அவரது கணவரும் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் குப்பைகளை நீக்கி வார்டை தூய்மையாக வைக்கக்கோரிய இளைஞரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலரும் அவரது கணவரும் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அலைளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் மக்களை தாக்கி இருப்பத ஜனநாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கியுள்ளது.

ஒரு பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்ற வேண்டும். அதற்காக தான் மக்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். ஜனநாயகத்தின் இந்த அடிப்படையை கூட புரிந்து கொள்ள முடியாதவர் தான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கவுன்சிலராக தேர்வாகி இருக்கிறார். இதுபோன்ற நபர்களிடம் இருந்து மக்கள் பணியை எப்படி எதிர்பார்க்க முடியும்.

தெருவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என போராடிய இளைஞரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா மற்றும் அவரது கணவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours