பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு விஸ்வகர்ம கைவினை கலைஞர்களுக்கான திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் பாஜகவிற்கு ஆதரவளித்துள்ளனர் என்றும் நாமக்கல்லில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டியின்போது கூறியுள்ளார்
நாமக்கல்லில் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் 46-வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினரும் அக்காட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசினார்.
அப்போது கூறிய அவர்,
பாரத பிரதமர் எந்த சமுதாய த்தை மக்களை பற்றி எல்லாம் இத்தனை நாள் அரசாங்கங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்களோ எந்த சமுதாயத்திற்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பலம் இல்லையோ குரல் இல்லையோ அவர்களை அரவ ணைப்பதான் விஸ்வகர்மா சமுதாயத்திற்காக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
பெரும்பான்மையானவர்களுக்கு அரசியல் அதிகாரம் என்பது சுலபமாக வாய்க்கிறது. சிறு சமுதாயங்களுடைய பங்களிப்பு என்பது நாட்டிலே அதிகம் அவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் வேண்டும் என்றால் அனைவரையும் சேர்த்து சமமாக பார்க்கக் கூடிய ஒரு அரசியல் கட்சியால் தான் அதை கொடுக்க முடியும். அந்த வகையிலே பாரதிய ஜனதா கட்சியும் பிரதமர் மோடி அவர்களும் விஷ்வகர்மா சமுதாய மக்களுக்காக அவர்கள் தொழில் சார்ந்த திட்டங்களாகட்டும் அல்லது அரசியல் அதிகாரமாகட்டும் எதுவாக இருந்தாலும் அத்தனை பேரையும் முன்னேற்ற வேண்டும் அவர்களையும் அரவணைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர் பிரதமர் தேர்தலில் விஷ்வகர்மா சமுதாயத்தினுடைய வாக்குகளை பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
விஷ்வகர்மா சமுதாயத்தினர் கொடுக்கின்ற கைவினை பொருட்களை தான் பிரதமர் உலகிற்கு செல்லும்போது கொண்டு செல்கிறார் என்று கூறிய வானதி சீனிவாசன் மத்திய அரசு திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் / பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மத்திய பாஜக நரேந்திர மோடி அரசு விஸ்வகர்மா கலைஞர்களுக்கு அளித்துள்ள திட்டங்கள் பெரிதும் பயன் தரும் திட்டமாக உள்ளது.
அனைத்து மக்களும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக தேர்தலில் கூட்டணிக்கு ஆதரவளிப்பதை பார்க்கிறோம். இந்த தேர்தலில் NDA அழுத்தமாக தன்னுடைய முத்திரையை பதிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு திட்டங்கள் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கை ஆகிவற்றை கணக்கில் வைத்து பார்க்கும் பொழுது உலக நாடுகள் பல்வேறு முறை பாராட்டு தெரிவித்துள்ளன. டிஜிட்டல் திட்டம், 11 கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, 10 கோடி பெண்களுக்கு இலவச கழிப்பறை, பல்வேறு வகைகளில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்றுள்ளனர். இவ்வளவு நாள் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக மோடி அரசு உதவிகளை செய்துள்ளது. ஆனால் I.N.D.I.A. கூட்டணியினர் சிதறுண்டு நிற்கிறார்கள். குடும்ப அரசியல், சுயநலத்திற்காக இந்தியா கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. அதனால் இந்த NDA கூட்டணியில் மக்கள் நலத்திட்டங்கள் வளர்ச்சி ஒரு புறமும்,
I.N.D.I.A கூட்டணியில் சுயநல, லஞ்ச, வாரிசு அரசியல் இன்னொரு புறமுமாக உள்ளது.
தேர்தல் பத்திரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வானதி, முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இதுபோன்ற தேர்தல் பத்திரங்களை சட்டமன்றத் தேர்தலின்போது பயன்படுத்தினார்கள். ஆனால் மக்கள் உரிய முடிவை அளித்தனர்..
பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு மட்டுமல்ல குஜராத், மத்திய பிரதேசம், அசாம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். நாளை இரவு கோவை வருகிறார். சாதாரண எளிய மக்களை போல் அனைவரிடமும் சென்று பேசி வருகிறார். அதனால் மோடி அவர்களைப் பார்த்து இங்குள்ள எதிர்கட்சியினருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி குறித்து வருகின்ற 19-ம் தேதி இறுதி வடிவம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த வானதி சீனிவாசன், பிரதமரை அவதூறு செய்யும் வகையில் மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்யும் போது நாங்கள் ஏன் அவரை போதை அமைச்சர் என்று கூறலாமே என்று வினவினார்.
UPA அரசாங்கத்தோடு திமுக ஆட்சி கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டிற்கு கொடுத்ததை விட மூன்று, நான்கு மடங்கு அதிகமாக நிதியினை தமிழ்நாட்டிற்கு தற்போது பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உள்ளார் என்றும் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் நாமக்கலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு விஸ்வகர்மா கைவணங்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் ஆர். எம். சண்முகநாதன், மாநில, மண்டல உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
+ There are no comments
Add yours