சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினரும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “தமிழகத்தில் எவ்வளவு போதைப் பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 3,500 கிலோ போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தி.மு.க ஆள் தானே? இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார். போதைப்பொருளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.
இன்றைக்கு தாய்மார்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?. பெண்களை சுதந்திரமாக மாற்றுங்கள். அவர்களுக்கு உங்கள் ரூ.1000 தேவையில்லை. பெண்களை சுதந்திரமாக ஆக்கினால் கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு சேமிப்பார்கள். எம்.ஜி.ஆர் வழங்கிய இலவச உணவை பிச்சை என முரசொலி மாறன் கூறிய போது யாரும் அதை கண்டிக்கவில்லை” எனப் பேசினார். குஷ்புவின் இந்த பேச்சு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours