எடப்பாடி பழனிசாமி பிரதமராகப் போகிறார்!

Spread the love

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, இந்தியா முழுவதும் உள்ள சின்ன சின்ன கட்சிகளை கூட்டணிகள் சேர்த்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வர வாய்ப்பு உள்ளது என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ எடப்பாடி பழனிசாமி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். தற்போது தங்கமணி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். வேலுமணி எம்எல்ஏவாக இருக்கிறார். நான் சட்டசபை உறுப்பினராக இருக்கிறேன். நாங்கள் இன்னொரு பதவி பொறுப்புக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு என்ன அவசியம் உள்ளது.

எதிர்க்கட்சி தலைவராக, சட்டசபை உறுப்பினராக தற்போது எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஒருவர் 2 பதவிகளுக்கு போட்டியிடக் கூடாது என்ற பாலிசி மக்கள் மத்தியில் உள்ளது. எம்.பியாக இருப்பவர் எம்.எல்.ஏவாக இருக்க முடியாது. 2 பதவிகளுக்கு ஒருவர் நிற்பதால் தேவையில்லாமல் அரசாங்க பணம் வீணாகிறது.

ஓபிஎஸ் ஜெயிப்பதற்கான வாய்ப்பே இல்லை, அதனால் தேர்தலில் நிற்கிறார். மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜ்யசபா எம்.பியாக நேற்று பதவி ஏற்கிறார். நாளை மக்களவை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் இப்படி பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தாம் நிச்சயம் தோல்வியை சந்திப்போம் என்று முன்பே தெரியும்.

எடப்பாடியார் ஏன் எம்.பி தேர்தலில் நிற்க வேண்டும் அவசியமே இல்லை?. அதிமுக 40 தொகுதிகளிலும் வென்று, சிறு சிறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து இந்திய துணைக் கண்டத்திற்கு எடப்பாடியார் பிரதமராக வர வேண்டும் என்ற சூழல் வந்தால், அன்று அவர் ராஜ்யசபா எம்.பியாக வந்து விட்டு போகிறார்.

அனைத்து மாநில கட்சிகளும் சேர்ந்து எடப்பாடியார் ராஜதந்திரம் மிக்கவர், திறமையானவர் என்று உணர்ந்து தேவகவுடா, சந்திரசேகர் எப்படி பிரதமர் ஆனாரோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆக வேண்டும் என்று நினைக்கும்போது, பிரதமர் ஆக்க நினைக்கும்போது ராஜ்யசபா எம்.பி ஆகிவிட்டு போகிறார். பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகும்போது ராஜ்யசபா எம்.பி.யாக தான் இருந்து வந்தார். வீம்புக்கு நின்று நீங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை” என ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours