சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நாட்டு மக்களுக்குப் பெருமிதம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் லேண்டரைத் தரையிறக்கிய முதல் நாடு என்னும் பெருமையை இந்தியா பெற்றுள்ளதாகவும், நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் இந்த வெற்றியை அடைந்துள்ளதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய உடனேயே, தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துடன் பிரதமர் மோதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, உங்கள் பெயரும் சோம்நாத், சந்திரனுடன் உங்கள் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதனால் உங்கள் குடும்பத்தில் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைவார்கள் என்றும், உங்களுக்கும் விஞ்ஞானிகள் குழுவினருக்கும் என் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துக்கொண்டார்.
சந்திரயான் 3 திட்டத்துக்காக ஓய்வின்றி உழைத்த விஞ்ஞானிகள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திய இஸ்ரோ தலைவர் சோம்நாத், அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
நிலவின் தென்துருவப் பகுதியில் தடம்பதித்த முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாகச் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours