நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகள் மற்றும் முன் ஜாமின் மனுக்கள், நிறைவேற்று மனுக்கள், சிவில் வழக்குகள் மற்றும் மேல்முறையீடு உள்ளிட்ட பல்வேறு மனுக்களை நேரடியாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் நடை முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இவற்றில், இ- கோர்ட் திட்டத்தின் கீழ், சென்னை ஐகோர்ட் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட வழக்குகள் மற்றும் மனுக்களை இ- பைலிங் வாயிலாக தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நடைமுறை செப்., 1 முதல், அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு, சென்னை ஐகோர்ட் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், எந்தெந்த வழக்குகள் மற்றும் மனுக்களை, இ- பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்ஜாமின் மனுக்கள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், வாடகை கட்டுப்பாடு மற்றும் வாடகை கட்டுப்பாடு மேல்முறையீடு வழக்குகள், மறுசீராய்வு மனுக்கள், நிறைவேற்று மனுக்கள், மாஜிஸ்திரேட் கோர்ட்களில் தனிநபர் புகார், டிரஸ்ட் ஒரிஜினல் மனுக்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனம் சார்ந்த மனுக்களை, இ-பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.
இது தொடர்பான முழு விவரங்களை, மாவட்ட நீதிமன்ற வெப்சைட் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
+ There are no comments
Add yours