28/07/24 முதல் 03708/24 வரையிலான இந்தவார ராசிபலன்கள்.

Spread the love

மேஷம்

மனதில் உற்சாகமும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும் வாரம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக அலுவலகப்பணிகளை கவனிக்க வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அரசாங்க அங்கீகாரம் கிடைக்கும். நீண்டகால கடன்களின் ஒருபகுதியையோ அல்லது முழுவதுமாகவோ திருப்பி செலுத்தும் வாய்ப்பு உருவாகும். சிக்கல்கள் பல இருந்தாலும் இல்லத்தரசிகள் மனதில் தைரியமாக இருப்பார்கள். ஷேர் மார்க்கெட் எதிர்பார்த்த ஆதாயத்தை தரும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு வண்டி வாகனங்கள் அல்லது வீட்டுமனை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். சுபகாரியங்கள் நடப்பதில் இருந்த தடைகள் அகலும்.

மிதுனம்

சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றிகளை பெற வேண்டிய வாரம் இது. தொழில் மற்றும் வர்த்தக துறையினர் லாபத்தை கணக்கில் கொண்டு புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் தள்ளி வைக்காமல் உடனடியாக செய்து முடிக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் திட்டமிட்ட லாபத்தை பெறுவார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். இல்லத்தரசிகள் வாழ்க்கைத் துணையோடு வாக்கு வாதங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக செய்ய வேண்டும் என்று நினைத்த விஷயங்களை செய்வதற்கான சூழல் ஏற்படும். புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்

பொறுப்புகளை நிறைவேற்றி மனத்திருப்தி அடையும் காலகட்டம் இது. குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரிகள் தொழில் துறை மற்றும் ஷேர்மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். ரியல்எஸ்டேட் துறையினருக்கு புதிய புராஜெக்ட்டுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்படுவதுடன், மதிப்பும் மரியாதையும் கூடும். கலைத்துறையினர் எதிர்பாராத புதிய வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வார்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்த நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழ்ச்சி அடைவீர்கள். இல்லத்தரசிகளுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வண்டி வாகன பராமரிப்பு செலவுகள் இந்த வாரத்தில் உண்டு.

சிம்மம்

மனதில் தெளிவு உண்டாகும் காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் நிதானமாக செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களும், மேலதிகாரிகளும் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கலைத்துறையினர் சிரமப்பட்டு உழைத்து அங்கீகாரம் பெறுவார்கள். ஷேர்மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெற பொறுமையாக இருக்க வேண்டும். இல்லத்தரசிகள் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர் வண்டி வாகனம், வீடுமனை வாங்குவதற்கு உங்களுடைய உதவியை நாடுவார்கள். இந்த வாரத்தில் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி

நிதானமாக திட்டமிட்டு காரிய வெற்றி அடைய வேண்டிய காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும் மனதில் உற்சாகம் ஏற்படும். ரியல்எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்புகள் ஏற்படும். இல்லத்தரசிகள் மனக் குமுறல்களை வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடங்களிலிருந்து பொருளாதார உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

துலாம்

பொறுமையாக செயல்பட்டு உங்களை நிரூபிக்க வேண்டிய வாரம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். ஷேர்மார்க்கெட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். மற்றவர்களை எதிர்பார்க்காமல், செய்ய வேண்டிய பணிகளில் நீங்களே நேரடியாக இறங்கி அவற்றை முடிக்க வேண்டும். இல்லத்தரசிகள் மற்றவர்களிடம் கவனமாக பேச வேண்டும். ஒரு சிலருக்கு புதிய நபர்கள் மூலம் வீடு, மனை ஆகியவற்றை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார ரீதியாக தடைகள்இருந்தாலும் கூட மனதில் தெளிவோடு காரியங்களில் ஈடுபட்டு வெற்றியடையும் காலகட்டம்.

விருச்சிகம்

மனதில் அமைதியையும் பொறுமையும் நிலை நிறுத்த வேண்டிய வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் உழைப்புக்கேற்ற லாபத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்று மனதில் சலிப்பை அடைவார்கள். சிறிய விஷயங்களில் கூட வெற்றி பெறுவதற்கு அதிகமுயற்சி செய்ய வேண்டியதாக இருக்கும். வாழ்க்கைத்துணையோடு எந்த விதமான வாக்குவாதமும் வேண்டாம். சிக்கலான நேரங்களில் உதவி செய்வதற்கு நண்பர்கள் உடனடியாக முன் வருவார்கள். இந்தவாரம் புதிய திட்டங்கள் எதையும் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து தரப்பினரும் இந்தவாரம் உடல் நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் இரவு பயணங்களை தவிர்க்கவும்.

தனுசு

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தை பெறுவார்கள். தொழில்துறையினர், வியாபாரிகள் உழைப்புக்கு ஏற்ற ஆதாயத்தை பெறுவார்கள். ரியல்எஸ்டேட் துறையினருக்கு லாபகரமான காலகட்டம். சீருடை பணியாளர்களுக்கு துறைரீதியான மரியாதை கிடைக்கும். இந்த வாரம் ஷேர் மார்க்கெட் துறையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினர் வாய்ப்புகளைப் பெறஇன்னும் கூடுதல் முயற்சிகளை செய்ய வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைப்பது தாமதம் ஆகும். இல்லத்தரசிகள் கோபத்தை வெளிக்காட்டாமல் செயல்பட வேண்டும். அரசியல் மற்றும் அரசாங்ககாரியங்களில் அனுகூலம் கிடைக்கும்.

மகரம்

நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் காலகட்டம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் ஆகியோர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். ஷேர்மார்க்கெட் மற்றும் ரியல்எஸ்டேட் துறையினர் திட்டமிட்ட வெற்றியை அடைவார்கள். புதிய வேலைவாய்ப்பை எதிர் நோக்கி இருந்தவர்கள் அதை பெறுவார்கள். இல்லத்தரசிகளுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. கலைத்துறையினர் தங்களுடையபுதிய முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான அச்சாரம் போடப்படும். செலவுகள் பலவகையாக இருந்தாலும் அவற்றை சமாளிக்கும் அளவுக்கு கைகளில் தன வரவும் இருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள் சாதனை புரிவார்கள்.

கும்பம்

மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும் வாரம் இது. உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடம் மாற்றத்தை பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். தொழில்துறையினர், வியாபாரிகள் நேரம்காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். இல்லத்தரசிகள் வழக்கம்போல் பொறுமையாக இருக்க வேண்டும்.ஷேர்மார்க்கெட் துறையினர் புது முதலீடுகளை தவிர்க்க வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்கள் புதியதொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிறியவிஷயங்களுக்கு கூட அதிகப்படியான உழைப்பை அளிக்க வேண்டும். வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்ப்பதுடன், தொலைபேசி பேச்சுக்களில் எச்சரிக்கை அவசியம்.

மீனம்

தடைகள் விலகி மனதில் உற்சாகம் ஏற்படும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் பழைய கடன்களை திருப்பி செலுத்துவார்கள். உத்தியோகஸ்தர்கள் மற்றும் சீருடைபணியாளர்கள் பணியிடத்தில் அங்கீகாரம் பெறுவார்கள். பணிபுரியும் பெண்மணிகளுக்கு புதிய பொறுப்புகளோடு பதவி உயர்வும் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் உள்ளவர்கள் ஆதாயம் அடைவார்கள். ஷேர்மார்க்கெட் துறையினர் திட்டமிட்ட லாபத்தை பெறுவார்கள். ரியல்எஸ்டேட் துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டும். கலைத்துறையினருக்கு அரசாங்க அங்கீகாரம் கிடைக்கும். மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours