இன்று அதிகாலை 6 மணிக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் மகா தீபத் திருவிழா கோலாகலமாக துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை மலையின் உச்சியில் ஏற்றப்படுகிற மகாதீபத்தைக் காண உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள். மலையையே சிவனாக வழிபடுகிற திருவண்ணாமலையில், வரும் டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
+ There are no comments
Add yours