உங்களுக்கான 12 ராசிகளின் இன்றைய (செப். 20, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசி சிறு சிறு கருத்து மோதல் வந்தாலும் சமாளிப்பீர்.
ரிஷபம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்.
மிதுனம்:குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, கூடும். வெளிவட்டாரத்தில் கவுரவ பதவி தேடி வரும்.
கடகம்: இல்லத்தில் அடிப்படை வசதிகள் பெருகும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.
சிம்மம்: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை சீரமைப்பீர்.
கன்னி: காரியத் தடைகள், அலைச்சல் வந்து போகும். குடும்பத்தினரால் வீண் செலவு உண்டு.
விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்க தொடங்குவீர்.
தனுசு: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர்.
மகரம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கு
கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்வீர். பணவரவு உண்டு. நல்லவர்களை அடையாளம் காண்பீர்.
மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)
+ There are no comments
Add yours