உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்:
மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.
ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
மிதுனம்: நெடுநாளாக அடைக்கமுடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். முன்கோபம் நீங்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலையுயர்ந்த மின்னணு சாதனம் வாங்குவீர். வியாபாரத் தில் லாபமுண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
.சிம்மம்: பணிகளை அலைந்து திரிந்து முடிப்பீர். பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
கன்னி: உங்களை உதாசீனப்படுத்திய உற்றார், உறவினர் இன்று உங்கள் வீடு தேடி வந்து பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மேலதிகாரி பாராட்டுவார்.
துலாம்: தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
விருச்சிகம்: உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.
தனுசு: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். வீடு, வாகன பராமரிப்பு செலவு இருந்தாலும் சமாளித்துவிடுவீர். தொழிலில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
மகரம்: புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். நண்பர்கள், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
கும்பம்: வீண் வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர். கடன் பிரச்சினையை சமாளிக்க வேண்டும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். பணிச்சுமை அதிகரிக்கும்.
மீனம்: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டு பேசுவார்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
+ There are no comments
Add yours