திருவண்ணாமலை கோயிலில்  விஐபி, விவிஐபி அனுமதி ரத்து!

Spread the love

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் விஐபிவிவிஐபி அமர்வு தரிசனம் ரத்துசெய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தடாலடியாக அறிவித்துள்ளது.

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவதுதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்இக் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும்உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும்,  வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினம் தோறும் வந்துவழிபட்டு செல்கிறார்கள்இந்த நிலையில் மேல்மருவத்தூர் மற்றும் ஐயப்பன் கோயில்  சீசன் தற்போது நடைபெற்றுவருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதுஇதனால் கோயிலில்கூட்டம் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேரம்  மிகவும் அதிகமாகிறதுநீண்ட தூரத்திற்கு காத்திருந்து பக்தர்கள்சுவாமிஅம்பாளை வழிபட வேண்டி உள்ளதுஇந்தநிலையில்  கோயிலுக்கு வரும் விஐபிகள் மற்றும் விவிஐபிக்கள்சிறப்பு தரிசனத்துக்கு  அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது

இதனால் பக்தர்களின் நலன் கருதிஅவர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கநடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டதுஅதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை பலமடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறதுகோயிலுக்கு வரும் அனைவரும் தரிசனம் செய்ய ஏதுவாக கோயில்நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் விஐபிவிவிஐபி சிறப்பு அமர்வு தரிசனம்முழுமையாக ரத்து செய்யப்படுவதாக  கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கோயில் நிர்வாகத்தின் இந்தஅறிவிப்பிற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்இதன் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்கும் நேரம்குறையும் என்று கோயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours