ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
நடப்புச் சாம்பியனான சென்னை அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 5 வெற்றியுடன் பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றால் இனி வரும் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தனது சொந்த மைதானத்தில் லக்னோவை தவிர்த்து எஞ்சிய அணிகளிடம் ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே, பஞ்சாபுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அதை தொடர முனைப்பு காட்டி வருகிறது.பேட்டிங்கில் ருதுராஜ், டேரில் மிச்செல், ஷிவம் துபே பக்கபலமாக உள்ளனர். பந்துவீச்சில் முஸ்தபிஜுர் ரஹ்மான், பதிரனா, ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை அளிக்கின்றனர்.அதேவேளையில், 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே பஞ்சாப் வெற்றிபெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.
இருந்த போதும், கடைசியாக கொல்கத்தாவுக்கு எதிராக 262 ரன்கள் இலக்கை சேஸ் செய்து, வரலாற்று வெற்றியை பதிவு செய்து வியக்க வைத்தது.. அதிலும், ஜானி பேர்ஸ்டோ, ஷஷாங் மனோகர் ஆகியோர் சென்னை அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.மேலும், ஐபிஎல் வரலாற்றில் இவ்விரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில், சென்னை 15 போட்டிகளிலும், பஞ்சாப் 13 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
+ There are no comments
Add yours