ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

Spread the love

AUSvsNED: நேற்று நடைபெற்ற 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 23வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றது. இன்று 24 வது லீக் போட்டியானது நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் டெல்லி, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மோதுகிறது.

இதில் ஆஸ்திரேலியா அணி, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. பின்னர் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றது. தற்போதுவரை 2 போட்டியில் வெற்றியும் இரண்டு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ள ஆஸ்திரேலியா, 4 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

அதே போல, நெதர்லாந்து அணி உலக கோப்பைத் தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் தோல்வியுற்ற நெதர்லாந்து 2 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளது.

அந்த இரண்டு போட்டியிலுமே ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தையும் ஆஸ்திரேலியா விட்டுக்கொடுக்காமல் விளையாடலாம். தற்போது போட்டியானது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் போடப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நெதர்லாந்து அணி பந்துவீச உள்ளது.

நெதர்லாந்து:

விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(w/c), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (W), கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours