இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியாகியுள்ளது. மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மைதானத்தில் முதல் போட்டி நடக்கிறது. இதில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் 2024 கிரிக்கெட்டின் 17வது தொடர் மார்ச் 22 ம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வாக அறவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொண்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 22ம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 74 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு போட்டிகள் 67 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் முதல் 21 போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மார்ச் 24ம் தேதி மோதுகின்றன. இந்நிலையில் சென்னையில் முதல் போட்டி தொடங்குவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours