டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு!

Spread the love

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 20ஆவது லீக் போட்டியில் இன்று ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஐடன் மார்க்ராம் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கவுள்ளது. இன்றைய போட்டியில் தேம்பா பவுமா இடம்பெறாததால் ஐடன் மார்க்ராம் தென்னாபிரிக்கா கேப்டனாக செயல்படுகிறார்.

இங்கிலாந்து நடப்பாண்டு உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிய 3 லீக் போட்டிகளில் வங்கதேசத்திற்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடமும் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 69 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்தது.

இன்று தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. மறுபக்கம் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது. இதனால், தென்னாபிரிக்கா அணியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

இரு அணிகளும் பலம் வாய்ந்து இருப்பதால், இன்று நடைபெறும் போட்டியில் அனல்பறக்கும் ஆட்டம் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இரு அணிகளும் இதுவரை 69 ஒருநாள் ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா 33, இங்கிலாந்து 30 வெற்றிகளைப் பெற்றுள்ளன.

5 ஆட்டங்களில் முடிவு எட்டப்படாத நிலையில், ஒரு போட்டி டை ஆகியுள்ளது. தற்போது உலகக்கோப்பை புள்ளி பட்டியலில் தென்னாபிரிக்கா அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், 2 புள்ளிகளும் இங்கிலாந்து அணி 6வது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில், உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. மேலும் இப்போட்டியில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா (விளையாடும் XI): குயின்டன் டி காக்(w), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(சி), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி ஆகியோர் உள்ளனர்.

இங்கிலாந்து (விளையாடும் XI): ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர்(w/c), டேவிட் வில்லி, அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ரீஸ் டாப்லி ஆகியோர் உள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours