டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு!

Spread the love

நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 45வது மற்றும் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி தற்போது களமிறங்கி விளையாட உள்ளது.

இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில், 8-லும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நெதர்லாந்து அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 2ல் வெற்றியும், 6ல் தோல்வியையும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

உலக கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் தோல்வியே அடையாதா அணி என்ற சாதனையை இந்திய அணி பெறக்கூடும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours