டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடர் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
இதில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில், டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர்பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதன்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தினார்.
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பல ஆண்டுகளாக இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.
அவருக்கு அடுத்ததாக நாடு முழுவதும் பல வீரர்கள் செஸ்சில் வென்றாலும், தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்தை நெருங்க முடியவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தா இவரின் சாதனையை பின்னுக்குக் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதோடு, 2023ம் ஆண்டில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டிய உலகின் இளைய செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதேபோல், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
இந்த நிலையில், நெதர்லாந்தில் நடந்துவரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார். இப்போட்டியில் அவர், டிங் லிரனை வீழ்த்தி அசத்தினார்.
தன்னை விட கிட்டத்தட்ட 200 புள்ளிகள் அதிகம் பெற்று உலக தரவரிசையில் கோலோச்சும் வலுவான டிங்கை விழ்த்தியதன் மூலம், தனது அபாரமான திறமை என்ன என்பதை பிரக்ஞானந்தா மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் கவனிக்கப்படும் வீரராக முன்னேறி வரும் பிரக்ஞானந்தா வெறும் 18 வயதிலேயே நாட்டின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளது, தமிழகத்திற்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கே இது பெருமையை சேர்த்துள்ளது.
+ There are no comments
Add yours