முகத்தில் புன்னகையுடன் உங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துமாறு ஆடுங்கள்..கில்லெஸ்பி!

Spread the love

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.இது அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தானை வேறு ஒரு உச்ச நிலைக்கு இட்டுச் செல்லும் என்று பாகிஸ்தானியரிடையே கடும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், “முதலில் பாகிஸ்தான் அணியினர் தங்கள் பலம், பலவீனங்களை அசைபோட வேண்டும். ஆஸ்திரேலியா அணி போல் ஆக வேண்டும் போன்ற மனநிலைகளையெல்லாம் மறந்து விடவேண்டும்” என்கிறார் ஜேசன் கில்லஸ்பி.

அதாவது, இங்கிலாந்து ‘பாஸ்பால்’ என்று அதிரடி முறையை டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஓரளவுக்கு அதில் வெற்றியும் கண்ட நிலையில் அதைப் போன்று காப்பி அடிக்கும் நடைமுறைகள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் துளிர் விடுகின்றன. அதை ஜேசன் கில்லஸ்பி ஏற்கவில்லை. அவரவர் அணிக்கு எது பொருத்தமோ அதைச் செய்ய வேண்டும் என்கிறார்.இது தொடர்பாக ஜேசன் கில்லஸ்பி கூறும்போது, “என்னுடைய கொள்கை என்னவெனில், நீ என்னவாக இல்லையோ அதுவாக ஆக முயற்சிக்காதே, என்பதுதான். பாகிஸ்தான் அணி தங்களுக்குப் பொருந்தக்கூடிய கிரிக்கெட் ஆட்டத்தை ஆட வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். இதுதான் முக்கியம்.நீ எப்படி ஆடுகிறாயோ அதில் உறுதியுடன் செயல்படு. நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம் பாசிட்டிவ் ஆக ஆடு, ஆக்ரோஷமாக ஆடு பொழுதுபோக்கு மனநிலையுடன் உற்சாகமாக ஆடு என்பதையே. முகத்தில் புன்னகையுடன் உங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துமாறு ஆடுங்கள். சில சமயங்களில் நிதானப்போக்கு தேவைப்படும்.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது இதுதான். டெஸ்ட் கிரிக்கெட் நம் திறமை, பொறுமைக்கு விடுக்கும் சவால்.சில வேளைகளில் அட்டாக் செய்ய வேண்டும், சில வேளைகளில் அப்படியே அரைக்க வேண்டும். இப்படி செய்தால் ஸ்கோர் போர்டு நகரும், வெற்றியும் சாத்தியமாகும்.பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பது பிரமாதமானது. இது எனக்குக் கிடைத்த கவுரவம்.

இதுவரை கோச்சிங்கில் இருந்தாலும் சர்வதேச அணி ஒன்றை வழிநடத்தவுள்ளது இப்போதுதான். எண்டர்டெயினிங் கிரிக்கெட் ஆடுவதற்கு நான் அவர்களைப் பழக்குவேன்.” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours