ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார் அரினா சபலெங்கா
4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முதல் இத்தொடரின் இறுதிப் போட்டிகள் தொடங்கியது.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரசின் அரினா சபலெங்கா – சீனாவின் குயின்வென் ஷெங்குடன் மோதினார். இருவருமே முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதால், இந்த போட்டியை உலகமே உற்றுப்பார்த்தது.
ஆட்டத்தின் முதல் செட்டிலேயே தனது அதிரடியை தொடங்கிய சபலெங்கா 6-3 என அதனை கைப்பற்றினார். இரண்டாவது செட் போட்டியிலும் கொஞ்சமும் சீன வீராங்கனைக்கு வாய்ப்பளிக்காமல் ஆக்ரோஷத்தை காட்டிய அவர் அதனை 6-2 என கைப்பற்றினார். இதன் மூலம் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று, கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இது சபலெங்காவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours