சென்னை: செஸ் விளையாட்டுப் போட்டியில் பல சாதனைகள் புரிந்த விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை படமாகிறது.
மயிலாடுதுறையில் பிறந்து செஸ் போட்டியில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். 1988-ம் ஆண்டு முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை இந்தியாவுக்கு பெற்று தந்தவர் என்ற பெருமைக்குரியவர். மேலும், 5 முறை உலக சாம்பியன், 2 முறை உலக கோப்பை செஸ் சாம்பியன் என பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அதுமட்டுமன்றி இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்த் மூலமாகவே செஸ் போட்டி பிரபலமானது என்று கூறலாம். அந்தளவுக்கு செஸ் போட்டியை பிரபலப்படுத்தியவர். தற்போது இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குகிறார்கள்.
விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளார் ஏ.எல்.விஜய். இதில் ஆனந்த் ஆக நடிப்பதற்கு முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஸ்வநாதன் ஆனந்த் கதையினை திரைக்கதையாக சஞ்சய் திரிபாதியும் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து எழுகிறார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கை மஹாவீர் ஜெயின் மற்றும் ஆஷிஸ் சிங் இணைந்து தயாரிக்கிறார்கள். அனைத்து மொழிகளிலும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
+ There are no comments
Add yours