யூரோ கோப்பை கால்பந்து- இறுதிப் போட்டியில் ஸ்பெயின் – இங்கிலாந்து மோதல்.

Spread the love

பெர்லின்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் ஜெர்மனியின் பெர்லின் நகரில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஸ்பெயின் அணி 4-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேவேளையில் இங்கிலாந்து அணி 58 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக பெரிய அளவிலான தொடரில் கோப்பையை கைகளில் ஏந்தும் கனவுடன் போட்டியை அணுகுகிறது.

1964, 2008, 2012-ம் ஆண்டுகளில் யூரோ கோப்பை தொடரில்சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியானது இம்முறை விளையாடி உள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சிறந்த அணியாக வலம் வருகிறது. லீக் சுற்றில் ஸ்பெயின் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கிலும், அல்பேனியாவை 1-0 என்ற கோல் கணக்கிலும் ஸ்பெயின் வீழ்த்தியது. தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் ஜார்ஜியாவை 4-1 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதி சுற்றில் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்தது.

அரை இறுதியில் பலம் வாய்ந்தபிரான்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தஆட்டத்தில் 16 வயதான ஸ்பெயினின் லாமின் யாமல் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அற்புதமாக கோல் அடித்திருந்தார். 2018 உலகக் கோப்பை தொடர் பிரான்ஸின் கிளியன் பாப்பேக்கும், 1958-ம் ஆண்டு உலகக் கோப்பை பிரேசிலின் பீலேவுக்கும் பெரியதிருப்புமுனையாக அமைந்தது. இதேபோன்று தற்போதைய தொடர் லாமின் யாமலுக்கு அமையக்கூடும் என கருதப்படுகிறது.

இங்கிலாந்து அணி 1966-ம்ஆண்டு உலகக் கோப்பை தொடரைவென்ற பிறகு பெரிய அளவிலான தொடரில் பட்டம் வெல்லவில்லை. 2021-ம் ஆண்டு யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் கால்பதித்த போதும் அந்த அணியால் பட்டம் வெல்ல முடியாமல் போனது. தற்போது தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ள அந்த அணி அரை நூற்றாண்டுக்கும் மேலாக உள்ள கோப்பை தாகத்தை தணிப்பதில் முனைப்புடன் செயல்படக்கூடும்.

நடப்பு யூரோ தொடரில் இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுகளில் பின்தங்கிய நிலையில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தியிருந்தது. ஸ்லோவேக்கியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜூட் பெலிங்ஹாம் கூடுதல் நேரத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 5-வது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றி தேடிக்கொடுத்திருந்தார்.

இதன் பின்னர் கால் இறுதி சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக புயாயோ சகா 80-வது நிமிடத்தில் அடித்த கோல் காரணமாக ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதில் பெனால்டி ஷுட்அவுட்டில் இங்கிலாந்து வெற்றி கண்டது. நெதர்லாந்து அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ஒரு நொடியே எஞ்சியிருந்த நிலையில் பதிலி வீரரான ஆலி வாட்கின்ஸ் அடித்த கோல் காரணமாக இங்கிலாந்து இறுதிப் போட்டியில் நுழைந்தது.

ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகள் கடைசியாக 2018-ம் ஆண்டுநேஷன்ஸ் லீக் தொடரில் மோதி இருந்தன. இதில் வெம்பிலியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து செவிலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours