அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 12-வது லீக் போட்டி நடைபெற்றது. இன்றைய போட்டியில் முதலில் இறங்கிய பாகிஸ்தான் 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 192 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய 30.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா 86 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 53* ரன்களும் குவித்தார்கள். பாகிஸ்தான் அணி ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும், ஹசன் அலி 1 விக்கெட் எடுத்தனர். உலகக் கோப்பையில் தொடர்ந்து 8-வது முறையாக பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்று வரலாறு சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்த வெற்றியை தொடர்ந்து மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் “வந்தே மாதரம்” பாடலை பாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours