திங்களன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தனது 594-வது இன்னிங்ஸில் 27,000 ரன்களை அதிவேகமாக எட்டிய விராட் கோலி, லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை விஞ்சினார்.
கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 27,000 சர்வதேச ரன்களை கடந்த நான்காவது பேட்டர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
35 வயதாகும் விராட் கோலி, அனைத்து வடிவங்களிலும் 27 ஆயிரம் ரன்களை விரைவு கதியில் கடந்து சாதனை புரிந்து டாப் பேட்டர்களான சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா ஆகியோர் பட்டியலில் இணைந்தார்.
இந்தச் சாதனையை நிகழ்த்த சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார். சச்சின் டெண்டுல்கர் 2007-ம் ஆண்டு 27,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இலங்கை விக்கெட் கீப்பர்/பேட்டர் சங்கக்காரா 2015-ல் தனது 648-வது இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டினார், அதே சமயம் பாண்டிங் ஆஸ்திரேலியாவுக்காக தனது 650-வது ஆட்டத்தில் இந்த சாதனையை எட்டினார்.
பிப்ரவரி 2023-ல், கோலி 549 இன்னிங்ஸ்களில் டெண்டுல்கரை விட 28 இன்னிங்ஸ்கள் குறைவாக ஆடி 25,000 ரன்களை எட்டிய வேகமான பேட்டர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அக்டோபர் 2023-ல், கோலி 26,000 ரன்களை மீண்டும் டெண்டுல்கரை விட 13 இன்னிங்ஸ்கள் குறைவாக ஆடி எடுத்து விரைவாக மைல்கல்லுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours