சிக்ஸர் அடித்து நடுவரிடம் பைசெப்ஸ் காட்டிய ஹிட்மேன் ..!

Spread the love

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 , இமாம்-உல்-ஹக் 36 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 192 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.வந்த வேகத்தில் சுப்மன் கில் 16 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து இறங்கிய விராட் கோலியும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

களத்தில் சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 86 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் அடக்கும். இப்போட்டியில் 6 அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இப்போட்டியில் 9-வது ஓவரை ஹரிஸ் ரவூப் வீசினார். அந்த ஓவரில் 2-வது மற்றும் 5 -வது பந்தில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்தார்.

ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்த உடன் 10 வது ஓவரின் போது நடுவரிடம் பைசெப்ஸ் காட்ட தனது ஸ்லீவ்-வை தூக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும், ஹசன் அலி 1 விக்கெட் எடுத்தனர். உலகக் கோப்பையில் 1992 முதல் 2023 வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 8 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இந்தியா வெற்றி பெற்று வரலாறு சாதனை படைத்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours