ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.
17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றன.
இன்று (29.3.2024) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதி, முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில், எந்த அணி தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யப்போகிறது என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், வெற்றிக்காக இரு அணிகளும் டஃப் கொடுத்து ஆடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சேஸிங் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
+ There are no comments
Add yours