நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா

Spread the love

அகமதாபாத்: நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய மகளிர் அணி வென்றது.

இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர்களில் 232 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 96 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா பிலிமெர் 39, இஸபெல்லா காஸி 25 ரன்கள் சேர்த்தனர்.

233 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 44.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 122 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் விளாசினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 63 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். யாஷ்டிகா பாட்டியா 35, ஷபாலி வர்மா 12, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 22 ரன்கள் சேர்த்தனர்.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours