புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
39 வயதான மோர்னே மோர்கல் தென் ஆப்பிரிக்க அணிக்காக 86 டெஸ்ட்போட்டி, 117 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 44 டி 20 ஆட்டங்களில் விளையாடி கூட்டாக 544 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்து செயல்பட்டிருந்தனர்.
+ There are no comments
Add yours