பாரிஸ்: ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செல்லி க்ரோப்பனை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான வில்வித்தை தனிநபர் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செல்லியை எதிர்கொண்டார். தொடக்கத்திலிருந்தே தீபிகா குமாரி ஆதிக்கம் செலுத்தி வந்தார். 27-24 புள்ளிகள் பெற்று முதல் செட்டில் 2-0 என முன்னிலை வகித்தார்.
இரண்டாவது செட்டில் 27-27 என்ற கணக்கில் சமன் செய்தார். மூன்றாவது செட்டில் 26-25 புள்ளிகளுடன் 5-1 என்ற நிலையில் தீபிகாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஆனால், 4-வது சுற்றில் 3-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனை கை ஓங்கியது. 5-ஆவது செட் 27-27 என சமனில் முடிய, 6-4 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிப் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
+ There are no comments
Add yours