செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, செக்குடியரசின் நுயென் தான் டாயுடன் மோதினார்.
இந்த ஆட்டம் 40-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. டி.குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டரோவுடன் மோதினார். இந்த ஆட்டம் 39-வது நகர்த்தலின் போது டிராவில் முடிந்தது.
விதித் குஜராத்தி, போலந்தின் மாட்யூஸ் பார்டெல் மோதிய ஆட்டமும் 41-வது நகர்த்தலில் டிரா ஆனது. 4 சுற்றுகளின் முடிவில் நோடிர்பெக் அப்துசட்டரோவ், பர்ஹாம் மக்சூட்லூ ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். ரிச்சர்ட் ராப்போர்ட், டி.குகேஷ் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 2-வதுஇடத்தில் உள்ளனர். விதித் குஜராத்தி 2 புள்ளிகளை பெற்றுள்ளார். பிரக்ஞானந்தா, வின்சென்ட் கீமர், டேவிட் நவரா, நுயென் தான் டாய் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் உள்ளனர். மாட்யூஸ் பார்டெல் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளார்.
+ There are no comments
Add yours