உலக கோப்பையை வென்ற நட்சத்திர வீரர்களுடன் போனில் உரையாடிய பிரதமர் மோடி !

Spread the love

டி20 உலகக்கோப்பை வெற்றியை பாராட்டும் விதமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரிடம் பிரதமர் மோடி போனில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

இந்தியாவின் இந்த வெற்றியை உலகமே கொண்டாடி வருகிறது. இந்திய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில முதல்வர்கள் என பலரும் இந்திய அணியை வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரிடம் பிரதமர் மோடி போனில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரோகித் ஷர்மாவிடம் பேசிய பிரதமர் மோடி, “அன்புள்ள ரோகித் ஷர்மா. நீங்கள் சிறந்த ஆளுமை கொண்டவர். உங்களின் ஆக்ரோஷமான மனநிலை, பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் ஆகியவை இந்திய அணிக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. உங்கள் T20 வாழ்க்கை என்றும் நினைவில் இருக்கும். இன்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி.’ என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோலியிடம் பேசிய அவர், “உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி. இறுதிப்போட்டியின் இன்னிங்ஸைப் போலவே, இந்திய பேட்டிங்கை அற்புதமாக நங்கூரமிட்டுள்ளீர்கள். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பிரகாசித்திருக்கிறீர்கள். டி20 கிரிக்கெட் உங்களை மிஸ் செய்யும், ஆனால் நீங்கள் தொடர்ந்து புதிய தலைமுறை வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ‘ என்று தெரிவித்துள்ளார்

ராகுல் டிராவிட்டிடம் பேசிய அவர், “ராகுல் டிராவிட்டின் அபாரமான பயிற்சிப் பயணம் இந்திய கிரிக்கெட்டின் வெற்றியை வடிவமைத்துள்ளது. அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மூலோபாய நுண்ணறிவு மற்றும் சரியான திறமையை வளர்ப்பது ஆகியவை அணியை மாற்றியுள்ளன. அவரது பங்களிப்புகளுக்காகவும், தலைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியா அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. அவர் உலகக் கோப்பையை உயர்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி. ‘ என்று கூறியுள்ளார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours