தக்காளி விலை ‘கிடு கிடு’ உயர்வு

Spread the love

சென்னை: தக்காளி உற்பத்தியில் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகம் 2ம் இடத்திலும், ஆந்திர மாநிலம் 3ம் இடத்திலும் உள்ளன. தமிழகம் 8ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தின் தக்காளி தேவையை ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன.

கர்நாடக மாநிலம் சிந்தாமணி, ஒட்டிப் பள்ளி, சீனிவாசபுரம் ஆகிய இடங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் பலமனேரி, மதனபள்ளி, புங்கனூர், ஆகிய இடங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படுகிறது. கடந்தஒரு வாரமாக தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில், அதன் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.33-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோரூ.60 ஆக உயர்ந்துள்ளது.

திருவல்லிக்கேணி ஜாம்பஜார், பெரம்பூர் சந்தை, சைதாப் பேட்டை சந்தை போன்ற சில்லறை விற் பனை சந்தைகளில் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கப்பட்டு வருகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.74 என விற்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.67-க்கு விற்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தையில் திடீரென தக்காளி விலை இரட்டிப்பாகி இருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, “தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் ஆந்திரா மற்றும் கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருகிறது. இதனால் அங்கு வெயில் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி குறைந்து, சந்தைக்கு வரத்தும் குறைந்து, விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு 3 வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

தக்காளி விலை உயர்வு குறித்து தோட்டக்கலை துறை இயக்குநர் குமரவேல் பாண்டியனிடம் கேட்டபோது, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், தக்காளி உற்பத்தி குறைந் துள்ளது. மழை இல்லாத மாவட்டங் களில் உற்பத்தியாகும் தக் காளியை, மழை அதிகம் பெய்யும் மாவட்டங்களுக்கு அனுப்ப நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தக்காளி விலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையோரங்களில் நிலவும் வானிலை மாற்றம் மற்றும் உற்பத்தி குறைவு தொடர்பாக ஆய்வு செய்யப்படும். விலை மேலும் உயர்ந்தால், துறை செயலர், அமைச்சருடன் கலந்தாலோசித்து அதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours