இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் யார் ? ஜாகிர்கானுக்கு அதிகம் வாய்ப்பு.

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமிபதி பாலாஜியும் உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு மற்றும் உதவி பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது பந்துவீச்சு பயிற்சியாளர் போட்டியில் இருந்த வினய் குமாரை பிசிசிஐ நீக்கிவிட்டு இரண்டு பெயர்களை மட்டும் இறுதி செய்துள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளர் ரேஸில் வினய் குமார், ஜாகீர் கான், லட்சுமிபதி பாலாஜி இடையே போட்டி நிலவியது. தற்போது இந்த போட்டியில் இருந்து வினய் குமார் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வினய் குமாரைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக மூத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாகீர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜியை பரிசீலிக்குமாறு கம்பீருக்கு பிசிசிஐ அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், இந்தியாவுக்காக 309 சர்வதேச போட்டிகளில் விளையாடி 610 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் ஜாகீர் கான் முன்னிலையில் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதவிக்கு அவர் சம்மதிக்கவில்லை என்றால் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமிபதி பாலாஜிக்கு வாய்ப்பு கிடைக்கும். இவர் ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஆனால், ஜாகீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது..


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours