ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

Spread the love

ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சார்பில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தவர் ஷான் மார்ஷ். 17 வருடம் 236 நாட்கள் என்ற வயதில் ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய ஷான் மார்ஷ், இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள், 73 ஒரு நாள் போட்டிகள், 15 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்காக விளையாடியுள்ளார். டெஸ்டில் 2,265 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 2,073 ரன்கள், டி20 போட்டிகளில் 255 ரன்கள் என மொத்தம் சர்வதேச கிரிக்கெட்டில் 5,293 ரன்களை அவர் குவித்துள்ளார்.

2017-18ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் போது அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்து அவர் வெற்றிக்கு வழி வகுத்தார். இதே போல இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் 616 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்றிருந்தார். பின்னர் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியில் சிறுது காலம் விளையாடினார்.

தற்போது 40 வயதாகும் ஷான் மார்ஷ், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் மெல்போன் ரெனகேட்ஸ் அணி சார்பில் விளையாடி வருகிறார். இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours