இன்று இந்தியா -நெதர்லாந்து மோதல்..!

Spread the love

நெதர்லாந்துக்கு எதிராக இன்று இந்திய அணி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகிறது.

2023 ஒருநாள் உலகக் கோப்பையில், இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்து முதலிடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் போட்டியை நெதர்லாந்துக்கு எதிராக இன்று இந்திய அணி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகிறது. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால், இந்த கடைசி போட்டியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், இந்த போட்டிக்கு முன்பு தங்களுக்கு நிறைய ஓய்வு கிடைத்துள்ளது. அரையிறுதிக்கு முன் பயிற்சிக்கு இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும். இந்திய அணிக்கு 6 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தனது கடைசி போட்டியில் விளையாடியது. எனவே, அனைத்து வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் விளையாட தயாராக உள்ளனர்.

இந்த ஓய்வு மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் நமக்கு உதவும். அரையிறுதிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என கூறினார். நெதர்லாந்துக்கு எதிராக சீனியர் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இதற்கு காரணம் பும்ரா காயத்தில் இருந்து திரும்பி வந்து தற்போது வரை தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவது தான்.

அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு ஓய்வு கொடுக்க முடியும். அதேசமயம் இந்த போட்டியில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours