உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி வரவுள்ளதாக தகவல்!…

Spread the love

2023 ஐசிசி 13வது உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களின் ஆரவரத்துக்கு மத்தியில் தொடங்கியது. ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று 45 லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

இதில் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நேற்று முன்தினம் மும்மை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், 4ம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதின.

தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அரையிறுதி போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதாவது, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது இந்தியா. இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளும் நிகழ்ந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதியது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடிய நிலையில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், தென்னாப்பிரிக்கா அணி 212 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டைகளை இழந்து 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

எனவே, நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. தொடர் முழுவதும் வெற்றியை ருசித்து வரும் இந்திய அணியும், தோல்வியில் இருந்து மீண்டு எழுச்சி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இப்போட்டியை காண ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்தவகையில், நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள உலககோப்பை தொடரின் இறுதிப் போட்டியை பார்க்க, பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில் விமான சாகசங்களை நிகழ்த்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உலகக்கோப்பை உறுதிப்போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல்வேறு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours