ராமர் கோயில் திறப்பு விழா – துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு !
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் மனைவியார் திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்களை விஸ்வஹிந்துபரிஷத் அகில பாரத இணைச்செயலாளர் PM நாகராஜன் அவர்களுடன் ஆர்.எஸ் எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்நிர்வாகிகள் அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை சார்பாக அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்குபூஜை செய்த அக்ஷதையும் அளித்தனர் . அவரும் பக்தியுடன் அதனைப் பெற்றுக்கொண்டு விரைவில் தரிசனம் செய்யவருவதாக தெரிவித்தார்கள்.