தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி ஆர்.தமிழ்சந்திரன் அப்பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஜெயஸ்ரீ சென்னை காவல்துறை நடவடிக்கைப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான மூர்த்தி திருநெல்வேலி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் சரக டிஐஜியாக உமா, வேலூர் சரக டிஐஜியாக சரோஜ்குமார், தஞ்சாவூர் சரக டிஐஜியாக ஜியா உல் ஹக், விழுப்புரம் சரக டிஐஜியாக திஷா மிட்டல், திருச்சி சரக டிஐஜியாக மனோகர், உளவுத்துறை டிஐஜியாக மகேஷ், சிஐடி உளப்பிரிவு டிஐஜியாக பகலவன், ரயில்வே டிஐஜியாக ராமர், கடலோர பாதுகாப்பு குழும பாதுகாப்பு டிஐஜியாக ஜெயந்தி, உளவுத்துறை (பாதுகாப்பு) பிரிவு டிஐஜியாக திருநாவுக்கரசு, வடசென்னை போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் டிஐஜியாக தேவராணி, தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் டிஐஜியாக மகேஷ்குமார், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு டிஐஜியாக வெண்மதி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை இயக்குநர் மற்றும் டிஐஜியாக ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பியாக தங்கதுரை, தேனி மாவட்ட எஸ்.பியாக சிவ பிரசாத், மதுரை மாவட்ட எஸ்.பியாக டோங்கரே பிரவின் உமேஷ், விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக ஃபெரோஸ்கான், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக சந்தீஷ், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக சண்முகம், விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக தீபக் சிவாச், அரியலூர் மாவட்ட எஸ்.பியாக செல்வராஜ், பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பியாக புக்யா ஸ்நேகா பிரியா, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக கிங்ஸ்லின், தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் எஸ்.பியாக மேகலினா ஐடன், சிவில் சப்ளை துறை எஸ்.பியாக ராமகிருஷ்ணன், கியூ பிரிவு எஸ்.பியாக ஷசாங் சாய் மற்றும் கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பியாக சசிமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராக கீதா, பரங்கிமலை துணை ஆணையராக சுதாகர், தென் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக பண்டி கங்காதர், ஆவடி போக்குவரத்து மற்றும் தலைமையிட கூடுதல் ஆணையராக ராஜேந்திரன், தாம்பரம் போக்குவரத்து கூடுதல் ஆணையராக மகேஷ்வரி, கோவை தெற்கு துணை ஆணையராக சரவணகுமார், மதுரை வடக்கு சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக அனிதா, சென்னை மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவலர் பயிற்சி கல்லூரி ஐஜியாக ஜெயகுமார், குற்றப்பிரிவு ஐஜியாக ராதிகா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக மல்லிகா, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல் இயக்குநர் மற்றும் ஐஜியாக முத்துசாமி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் ஐஜியாக ராஜேஸ்வரி, சென்னை தலைமையிட ஆயுதப்பிரிவு ஐஜியாக லக்ஷ்மி, மனித உரிமை மற்றும் சமூக நீதி ஐஜியாக சாமுண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours