அதிமுக முன்னாள் அமைச்சர் மரணம்!

Spread the love

ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த வடிவேல் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 86.

திருப்பத்தூர் மாவட்டம் சம்பந்தி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (86). இவர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஊரக வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதற்கடுத்த தேர்தல்களில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் அரசியல் இருந்து ஒதுங்கி இருந்தார்.

முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக வடிவேல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு 8 மணிக்கு இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வடிவேலுவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். முன்னாள் அமைச்சர் வடிவேலுவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours