அத்திக்கடவு – அவினாசி திட்டப் பணிகள் எல்லாம் முடிந்துவிட்டன என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் குறித்து எஸ்.பி. வேலுமணி எழுப்பிய கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் அளித்த பதில் வருமாறு: உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் நான் அன்றைக்கு பதில் சொல்லும்போது, அவர் இல்லையென்று கருதுகிறேன்.
அத்திகடவு -அவினாசி திட்டத்தைப் பொறுத்தவரையில் அந்தத் திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள் என்பதை யாரும் இல்லையென்று சொல்லவில்லை. எல்லா வேலைகளும் முடிந்துவிட்டது. ஆனால் பணம் கொடுக்காமல் போய்விட்டீர்கள்.
ஒன்று பைப் கொண்டு போவதற்கு ஆட்சேபணை எழுந்தது. இரண்டாவது, நீங்கள் பைப்-ஐ கொண்டு போய் விடுங்கள் நாங்கள் பயிர் செய்து கொள்கிறோம் என்று சொன்னது.
இதுபோன்று இரண்டு, மூன்று கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு, இப்போது தயாராக இருக்கிறது. நாளைக்குகூட தொடங்கலாம்.
காலிங்கராயன் சேனலுக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க வேண்டும். பம்ப் செய்தால்தான் தண்ணீர் போகும். நமக்கு காவிரியிலிருந்து தண்ணீர் இன்னும் வரவில்லை. காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட்ட மறுநாள் காலிங்கராயன் சேனலுக்குக் அடுத்த நாளே திறந்து விடுகிறோம்.
அடுத்து நீங்கள் கேட்ட இரண்டாவது திட்டத்தைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம் முடிந்த பிறகு, அந்தத் திட்டம் எடுத்துக்கொள்ளப்படும்.
அதற்கான ஆய்வுகள் எல்லாம் மேற்கொண்டு இப்போது தயாராக வைத்திருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பதிலளித்தார்.
+ There are no comments
Add yours