தமிழ்நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதம் அமாவாசையில் மூலம் நட்சத்திரம் வரும் நாளில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமான் கோயில்களிலும் பெருமாள் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறை தசமி திதியன்று அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். அந்த வகையில் இன்று தமிழகத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
விளம்பரம்
அந்த வகையில் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து 1 லட்சத்து எட்டு வடை மாலை சாத்த பட்டது. நேற்று ஒரு டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை ஒரு லட்சத்து எட்டு வடமாலை சாத்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆஞ்சநேயர் பிறந்தநாளான இன்று கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதன்படி இன்று அதிகாலை 5. 30 மணி அளவில் வட மாலை சாத்தப்பட்டு திரை விலக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டு ஆஞ்சநேயர் அருளை பெற்றனர்.
விளம்பரம்
அதிகாலை முதலிலேயே சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றனர். இதனை அடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக நாமக்கல் போலீசாரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று பகல் 11 மணி அளவில் அபிஷேகங்கள் தொடர்ந்து தங்க காப்பு அலங்காரம் ஆஞ்சநேயருக்கு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours