2050ஆம் ஆண்டுக்குள் பூமியில் பாதி காணாமல் போய்விடும் என நோபல் பரிசு பெற்றவரும் பருவநிலை மற்றும் காலநிலை சூழலியல் நிபுணருமான டாக்டர் மோகன் முனசிங்கே தெரிவித்துள்ளது அதிர்ச்சியை (shocking )ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் அமைந்துள்ளது ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி. இந்த பொறியியல் கல்லூரியின் 22 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பருவநிலை, காலநிலை, சுற்று சூழலியல் நிபுணரான டாக்டர் மோகன் முனசிங்கே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில் ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தங்கம் மேகநாதன், கல்வி நிறுவனங்கள் துணை தலைவர் அபய் மேகநாதன், சிஆர். முத்துகிருஷ்ணன், உள்ளிட்ட கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் டாக்டர் மோகன் முனசிங்கே பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் பருவநிலை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், சிறப்புரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், வளர்ந்த நாடுகள் ஆதார வளங்களை அதிகளவு நுகர்வதால் பருவநிலை மாற்றம் போன்ற சிக்கல்கள் ஏற்படும் போது,
பூமிப் பந்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏழை நாடுகளுக்கே அதிக பாதிப்பு உண்டாகிறது.
மேலும் அழிவை விளைவிக்கதக்க ஆயுத தளவாடங்களுக்கு 2 ட்ரில்லியன் டாலர் செலவிடப்படுவதாகவும் ஆனால் சமூகத்தின் வளர்ச்சிக்காக செலவிடப்படும் தொகையோ மிகவும் குறைவு என பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சுற்று சூழல், இயற்கை வளங்களை உலக நாடுகள், அதன் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் பாதுகாக்க தவறினால் 2050க்குள் பூமியில் பெரும்பகுதி காணாமல் போகும்.
மிகப்பெரிய மாற்றங்களை பூமி சந்திக்கும், அதிகளவு உயிரினங்களும் அழியும் அபாயம் உள்ளது என அதிர்ச்சி (shocking ) தகவலை கூறினார்.
உலக நாடுகளின் தலைவர்கள் அழிவின் விளிம்பில் உள்ள பூமியை காக்க சுற்று சூழல், இயற்கையை காக்க, புவி வெப்பமயமாவதை தடுக்க, மாற்று எரிபொருளை ஊக்குவிக்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
+ There are no comments
Add yours