ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.! இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

Spread the love

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளினால் (சூதாட்டம்) பணத்தை இழந்து அதிக கடன்களை வாங்கி பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தின் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது.

கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமானது நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநில அரசுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிமை இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதன் விசாரணைகள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நிறைவு பெற்றன. அரசு மற்றும் ஆன்லைன் நிறுவனங்கன் என இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாகவே ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதங்களை பதிவு செய்த நிலையில், தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருந்தது. அதன்படி தமிழக அரசுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசு குறிப்பிடுகையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து இதுவரை 32 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் படித்த இளைஞர்கள், தினக்கூலி வேலையாட்கள் என பலர் பணத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. என்றும் விளக்கம் அளித்து இருந்தது.

இருதரப்பு வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தீர்ப்பு தேதியானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதியப்பட்ட வழக்கில் நீதிபதி கங்காபூர்வாலா, ஆதிகேசவலு அடங்கிய நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours