வழக்கம்போல ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இருக்கையில் பயணிக்க குறைந்தபட்சம் ரூ.2,000 வசூலிக்கப்படுகிறது. இது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதைவிட அதிகம் என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக கட்டணம் தொடர்பான புகார்களை 1800 425 6151, 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கார் மற்றும் இதர சொந்த வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, ஓஎம்ஆர், திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours