ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னை, பெங்களூரிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆயுதபூஜை இந்த ஆண்டு வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமை ஆகும். ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை இருப்போருக்கு 3 நாட்கள் சேர்த்து விடுமுறை கிடைத்துவிட்டது. அதுபோல விஜயதசமி தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை ஆகும். எனவே அவர்களை பொருத்தமட்டில் 4 நாட்கள் விடுமுறை தினமாகியுள்ளது.
பொதுவாக இது போன்ற தொடர் விடுமுறைகளின் போது மக்கள் சென்னை, பெங்களூரிலிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர். அந்த வகையில் இந்த ஆயுத பூஜைக்கும் மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வர் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தினசரி சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஆயுத பூஜையையொட்டி கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது
+ There are no comments
Add yours