வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறை வரவுள்ளதால் ஏற்கனவே சனி , ஞாயிறு என பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகிவிட்டனர்.
தொடர் விடுமுறை கருத்தில் கொண்டு, வரும் அக்டோபர் 20 வெள்ளி மாலை முதலே சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. 20, 21, 22 ஆகிய தேதிகளில் மொத்தமாக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, தற்போது அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு ஊழியர்கள் யாரும் விடுமுறை எடுக்க கூடாது என்றும், அப்படி மீறி விடுமுறை எடுத்தால் அந்த விடுமுறை DO, CO, CL, EL, SL ஆகிய பிரிவுகளின் விடுப்பு வழங்கப்படாது.
அதனையும் மீறி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர் , நடத்துனர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் அக்டோபர் 20,21,22 ஆகிய தேதிகளில் தாம்பரம், பூந்தமல்லி புறநகர், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலைங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆயுத பூஜையை அடுத்து தீபாவளி விடுமுறை தின சிறப்பு பேருந்து பற்றிய முக்கிய அறிவிப்பு வரும் அக்டோபர் 28ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
+ There are no comments
Add yours