ஆரியப்பழமை மறையட்டும், சமத்துவ திராவிட மலரட்டும் எனக்கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் தனது மனைவி கிருத்திகாவுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில், பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மனைவி கிருத்திகாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ”ஆரிய பழமை மறையட்டும். சமத்துவ திராவிடம் மலரட்டும். இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், ”உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு என் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தை மாதம் சேலத்தில் நடைபெறவிருக்கும் திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஒன்று கூடி இந்திய ஒன்றியத்திற்கே வழி பிறக்கின்ற வகையில் அயராது உழைத்திட உறுதி ஏற்போம். மாநில உரிமையை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காத்திட தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் சூளுரைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours